உத்திரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஜம்முவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஒரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து அந்த இளைஞர் கொலை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த சிறுமியின் தந்தை தாலிப் அலி இது தொடர்பாக தெரிவித்ததாவது, தன்னுடைய குடும்பத்துடன் ஜம்முவில் 8 வருட காலமாக அவர் வசித்து வருகிறார். அதோடு, குற்றம் சுமத்தப்பட்ட ஆஷு 4 மாதங்களுக்கு முன்னர் ஜம்முவிற்கு வந்தார். தன் 16 வயது மகள் அந்த இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறினார் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு உத்தரபிரதேச மாநிலத்தின் ஹபூர் மாவட்டத்திற்கு வருகை தந்த ஆஷு பீம் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்க ஆரம்பித்தினர்.
இந்த சூழ்நிலையில் தான் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கடந்த 22ஆம் தேதி அந்த சிறுமியை அந்த இளைஞன் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் முதலில் அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து காவல்துறையினரை குழப்ப முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனாலும் இறுதியில் காவல் துறையிடம் வசமாக சிக்கிக் கொண்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் கூட பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெறிக்கப்பட்டு தான் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 16 வயது சிறுமியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக அந்த மாவட்ட காவல் நிலைய பொறுப்பாளர் ஆஷிஷ் குமார் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.