கர்நாடக மாநிலத்தில் தாவன கெரே வித்தியா நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண் முகநூலில் சில பேருடன் நண்பராக இருந்துள்ளார். என் நிலையில் தனது முகநூல் நண்பர்களான, சிவராஜ், சுரேஷ்குமார், ரம்யா,பவித்ரா மற்றும் அவரது காதலனுடன் அண்மையில் அந்த பெண் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்.
தங்கும் விடுதியில் அந்த பெண் தன் காதலனுடன் தனிமையில் இருந்ததை முகநூல் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பிறகு அனைவரும் சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய பிறகு, முகநூல் நண்பர்கள் நாலு பேரும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு 15 லட்சம் பணம் வேண்டும் என்றும், அப்படி தராவிட்டால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறி அந்த பெண் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை வாங்கிக் கொண்ட அந்த முகநூல் நண்பர்கள் திரும்பவும் பணம் கேட்டு மிரட்டியதால் அந்த பெண் வித்யா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகநூல் நண்பர்கள் ரம்யா, பவித்ரா ,சுரேஷ் குமார் சிவராஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.