கிடைத்த கேப்பில் சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி.. அடித்து துவைத்த மக்கள்…!

திண்டுக்கல் மாவட்டம், அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் அவரது மனைவி மற்றும் அவர்களின் எட்டு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் விட்டின் அருகில் உள்ள சிறுமிகளுடன் சேர்ந்து அங்குள்ள கோவில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சைக்கிளில் ஐஸ் மற்றும் சமோசா விற்றுக் கொண்டு, வேடசந்தூர் சாலைத்தெருவைச் சேர்ந்த முகமதுரபீக் (50) என்பவர் வந்துள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை பார்த்தவர் முகமதரபீக் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளார். பிறகு சிறுமியின் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி, சக்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணி வைத்து அடைத்துள்ளார். இதைபார்த்த அங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ஐஸ் வியாபாரி முகமதுரபீக்கை பிடித்துவைத்துவிட்டு.

இது தொடர்பாக கூம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முகமதுரபீக்கை கைது செய்தனர். வேடசந்தூர் அருகே சிறுமியை கட்டி வைத்து கடந்த முயன்ற சம்பவத்தால், ஐஸ் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

தமிழகமே... இன்று எந்த ஒரு பள்ளிகளும் இயங்காது...! தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு...! இது தான் காரணம்...

Mon Jul 18 , 2022
கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவிப்பு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் இளங்கோவன்; கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை அதிர்ச்சிகரமானது. இது தொடர்பான அரசு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே […]

You May Like