அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுகவின் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் விதமாக, பன்னீர்செல்வத்தின் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டனர். பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமனம் செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.
ஆகவே பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்க்கும் விதமாகவும், அதிமுகவின் பொது செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தும் பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டனர்.
இந்த வழக்குகளை நீதிபதி கே குமரேஷ் பாபு கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்தார்.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என்று இரு தரப்பிலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதம் செய்த சூழ்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இத்தகைய சூழ்நிலையில்தான் இந்த வழக்கில் மார்ச் மாதம் 28ஆம் தேதியான இன்று காலை நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என அவர் உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் அதிமுகவின் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுகவின் வழக்கறிஞர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வடக்கை நாளை விசாரிக்க 2️ நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒப்புதல் வழங்கியுள்ளது.