fbpx

நர்ஸிங் முடித்திருக்கிறீர்களா….? எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு உடனே முந்துங்கள்….!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் என்று அழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியா முழுவதும் nursing officer Recruitment common Eligibility test தேர்வின் மூலமாக பணியிடத்திற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தேர்வின் மூலமாக 3,055 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர் ஆகவே ஆர்வம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக 5-5- 2023 அன்றைக்குள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

பணியின் விவரம்:nursing officer

ஒட்டுமொத்த பணியிடங்கள்: 3,055

பணியிடம்: இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்கள்

கல்வி தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு B.sc.(Hons.) Nursing/B.sc.Nursing/B,sc(post certificate) post basic B.sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மாநில இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர் மற்றும் மருத்துவச்சியாக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது diploma in general Nursing midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பணிக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் அதோடு 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஊதியம் தொடர்பான விவரம் : இந்த பணிகளுக்கு அரசு விதிகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் : பொது பிரிவினருக்கு 3000 மற்றும் பட்டியலின பழங்குடியின பிரிவினருக்கு 2400 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் இணையதள மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : Nursing officer Recruitment common eligibility test merit list & allocation of seats உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://norcet4.aiimsexams.ac.in/?AspxAutoDetectCookieSupport=1என்ற இணையதளத்தை கிளிக் செய்து விண்ணப்பம் செய்து கொள்ளலாம் இதற்கான கடைசி விண்ணப்ப தேதி 5- 5- 2023 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Post

வங்கக் கடலில் விரைவில் உருவாகிறது புயல்….! புயல் சின்னத்தின் பெயர் என்ன தெரியுமா…?

Thu May 4 , 2023
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. ஒருபுறம் வெயில் வரலாறு காணாத அளவிற்கு இருந்தாலும் மறுபுறம் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தற்சமயம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு இது புயலாக […]

You May Like