விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தன் (29) என்பவர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் என் ஜி ஓ சாலையில் இருக்கின்ற தன்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கடந்த 5 வருட காலமாக சென்னை விமான நிலையத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி வேலை முடிந்து அப்படியே சொந்த ஊரான விழுப்புரத்திற்கு செல்ல உள்ளதாக சகோதரிகளிடம் தெரிவித்துவிட்டு ஜெயந்தன் சென்றுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் ஜெயந்தன் திடீரென்று காணாமல் போனார். இதனால் சந்தேகமடைந்த அவருடைய சகோதரி கைபேசியில் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவருடைய சகோதரி விழுப்புரம் உள்ள தன்னுடைய தந்தை அவரிடம் கேட்டபோது ஜெயந்தன் ஊருக்கு வரவில்லை என்று தெரிவித்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
இதன் காரணமாக, பதறிப்போன அவருடைய அக்கா பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் தம்பியை காணவில்லை என்று புகார் வழங்கினார்.ஆகவே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் கைபேசி நம்பரை ஆய்வு செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி என்ற பகுதியில் இருப்பதாக சிக்னல் காட்டியது. இதனை தொடர்ந்து கடந்த 1ம் தேதி தனி படை காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்ற போது அங்கே பாலியல் தொழில் செய்யும் பாக்கியலட்சுமி (38) என்ற இருந்தார் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஆனால் முதலில் எனக்கு தெரியாது என்று பாக்கியலட்சுமி தெரிவித்ததால், அதன் பிறகு காவல்துறையினர் தங்களுடைய வாழ்வில் விசாரிக்க தொடங்கினர். எதிர்நீச்சல் தெளிக்கும் தகவல்கள் கிடைத்தது அதாவது அவர் காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பாக்கியலட்சுமியை ஜெயந்தன் தாம்பரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் முதலில் சந்தித்துள்ளார்.
அதன் பிறகு அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜலட்சுமி திருமணம் செய்து கொண்டார். என்று கூறப்படுகிறது ஆனால் சில தினங்களில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் தெரிந்து விட்டனர்.
ஆகவே பாக்கியலட்சுமி ஜெயந்தனை விட்டு பிரிந்து தன்னுடைய சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார். கடந்த மாதம் 19 ஆம் தேதி ஜெயந்தன் மறுபடியும் பாக்கியலட்சுமியை பார்ப்பதற்கு புதுக்கோட்டைக்கு வந்த போது தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்லி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமி தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஜெயந்தனை அடித்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டைப்பை மற்றும் சூட்கேசில் அடைத்து 20 மற்றும் 26 ஆம் தேதிகளில் கோவளம் கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டேன் என்று தன்னுடைய வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
இந்த கொலைக்கு புதுக்கோட்டையைச் சார்ந்த சங்கர், கோவளத்தைச் சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்டார் உடந்தையாக இருந்தனர் என்றும் கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடலை தோண்டி எடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றன விமான நிலைய ஊழியர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.