fbpx

ஆணுறைகளில் ஆல்கஹால்… போதைக்கு அடிமையான இளைஞர்கள்.. கியூவில் நின்று வாங்கும் அவலம்…!

மேற்கு வங்காளத்தின் துர்காபூரில், மாணவர்கள் ஆணுறைகளுக்கு அடிமையாகியுள்ளனர். துர்காபூர் நகர், பிதான்நகர், பெனாசிட்டி, முச்சிபாரா, சி மண்டலம் மற்றும் ஏ மண்டலம் போன்ற பகுதிகளில், மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் வரிசையில் நின்று ஆணுறைகளை வாங்கி செல்கின்றனர்.

இதனால் ஆணுறை விற்பனை பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக துர்காபூரில் இருக்கும் கடைக்காரர்கள் கூறுகின்றனர். ஆணுறைகளை வாங்கிச் செல்லும் மாணவர்களும் இளைஞர்களும் அவற்றை சூடான நீரில் ஊறவைக்கும்போது, ​​ஒருவித போதை தரும் ஆல்கஹால் வெளியாகிறது. அந்த நீரை மாணவர்கள் அருந்துகின்றனர். இது மிகவும் போதை தரக்கூடியதாக இருக்கிறது. இந்த நீர் மாணவர்களுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை போதை தரக்கூடியதாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து துர்காபூர் கல்லூரி வேதியியல் பேராசிரியர் நூருல் ஹக் கூறும் போது ஆணுறைகளை நீண்ட நேரம் வெந்நீரில் ஊறவைப்பதால் பெரிய கரிம மூலக்கூறுகள் உடைந்து போதை தரும் ஆல்கஹால் கலவைகள் உருவாகின்றன. இந்த கலவை இளைஞர்களுக்கு போதையை தருகிறது என கூறினார். துர்காபூர் மாவட்ட மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் திமான் கூறும் போது ஆணுறையில் ஒருவித நறுமண கலவை உள்ளது. அதை உடைப்பதன் மூலம் மது உற்பத்தியாகிறது என்றார். மேலும் இளைஞர்கள் போதைக்காக இது போன்ற வழிகளை கையாலுவது, இது முதல் முறை அல்ல இருமல் மருந்து குடிப்பது, நெயில் பாலிஷ், கை சுத்திகரிப்பான் குடிப்பது, ஷேவ் செய்ய பயன்படுத்தும் லோஷன், ரொட்டியில் அயோடெக்ஸ் தடவி சாப்பிடுவது போன்ற போதை தரும் வழிகளை பயன்படுத்துகின்றனர்.

Rupa

Next Post

எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் தன்னிச்சையாக செயல்பட; தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு...!

Thu Jul 21 , 2022
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக கட்சியில் செயல்படவும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யும்படியும் பிரதான கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி […]

You May Like