fbpx

சீன செல்போன் நிறுவனமான விவோ வில் சிக்கியது தங்க கட்டிகளா?.. அமலாக்கத்துறை சோதனை..!

கடந்த 2020-ம் ஆண்டு சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான ஆய்வு கடுமையாக்கப்பட்டது. இதனால் டிக்-டாக் பேன்ற 200-க்கும் மேற்பட்ட சீன நாட்டின் செல்போன் ஆப்கள் முடக்கப்பட்டன. இந்தியாவில் வணிகம் புரியும் சீன நாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில், சீன நிறுவனமான விவோ செல்போன் கம்பெனி அதன் முதல் விற்பனை தொகையான ரூ.62,476 கோடியை, இந்தியாவுக்கு வரிசெலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவொ செல்போன் கம்பெனிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனம் மற்றும் அதனோடு தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின் விவரங்களை அமலாக்க அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதில், அந்த நிறுவனம் மற்றும் அதனோடு தொடர்புடைய 23 நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக, சோதனையின்போது 119 வங்கிக்கணக்குகளில் இருந்த ரூ.66 கோடி நிரந்தர வைப்புத்தொகை, ரூ.75 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 2 கிலோ தங்கக்கட்டிகள் என மொத்தம் ரூ.465 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Rupa

Next Post

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்..! பிரதமர் மோடி இரங்கல்

Fri Jul 8 , 2022
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வரும் 10ஆம் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்றிரவு நாரா நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில், […]
அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம்..!! இந்த பிரச்சனையை கையாள்வது சிரமம்தான்..!! ஷாக் கொடுக்கும் பிரதமர்..!!

You May Like