fbpx

கொடுத்த கடனை கேட்டதால் விபரீதம்….! கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட கொடூரம்…..!

ஒருவருக்கு கஷ்டம் என்று வந்துவிட்டால் அவருக்கு பணம் கொடுத்து உதவுவது ஒரு விதமான மனிதப் பண்பு. அப்படி நம்மிடம் பணம் வாங்குபவர்கள் நாணயமான முறையில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கும் நபர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் ஆபத்திற்கு பாவமில்லை என்ற உதவி செய்த நபர்களையே பழி தீர்க்கும் கும்பலும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (68) இவர் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அவை தலைவராக பணியாற்றி வருகிறார். பட்டு சேலை வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில்களை செய்து வந்தார் என்று கூறப்படுகிறது.

இவர் சென்ற 5ம் தேதி செய்யாறு பகுதிக்கு சென்று இருக்கிறார் ஆனால் அங்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருடைய கைபேசியை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதற்றத்திற்கு உள்ளான அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆரணி காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரினை அடிப்படையாகக் கொண்டு, தனிப்படை அமைத்து காவல்துறை அவரை தீவிரமாக தேடி வந்தது.

கோதண்டத்தின் கைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது, ஆரணியை அடுத்துள்ள ஆகாரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் கோதண்டத்திற்கு பலமுறை தொலைபேசியில் பேசியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது.

அதாவது பணம் கொடுக்கல், வாங்கல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவருடைய நண்பரான ஆரணி அருணகிரி சத்திரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குமரன் மற்றும் ஆந்திர மாநில கூலிப்படையைச் சார்ந்தவர்களை வைத்து கோதண்டத்தை கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து, அவருடைய உடலை ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் இருக்கின்ற கால்வாயில் வீசியது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் முக்கிய குற்றவாளிகளான சரவணன் (36) குமரன் (35) சென்னையை சேர்ந்த நேருஜி( 42) குட்டி என்கின்ற தனிகாசலம் (45) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டனர் இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நால்வரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

Next Post

’நான் தான் அபுதாபி மன்னரோட பணியாளர்’..!! 4 மாதங்களாக சொகுசு வாழ்க்கை..!! ரூ.23 லட்சம் பில் பாக்கியுடன் ஓட்டம்..!!

Tue Jan 17 , 2023
டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி மொகமத் ஷெரீப் என்பவர் அறை எடுத்து தங்கியுள்ளார். ஹோட்டல் ஊழியர்களிடம் தன்னை அபுதாபி மன்னர் குடும்பத்து பணியாளர் என்றும் மன்னருக்கு தனிப்பட்ட முறையில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்திருப்பதாக கூறி அபுதாபி குடியிருப்பு சான்று உட்பட சில ஆவணங்களையும் காட்டியுள்ளார். தான் சொல்லும் கதையை அனைவரும் நம்ப வேண்டும் என்பதற்காக அடிக்கடி […]
’நான் தான் அபுதாபி மன்னரோட பணியாளர்’..!! 4 மாதங்களாக சொகுசு வாழ்க்கை..!! ரூ.23 லட்சம் பில் பாக்கியுடன் ஓட்டம்..!!

You May Like