காவல் நிலையத்திற்கு தலையுடன் நடந்து சென்றவரை.. பார்த்து பீதியில் உறைந்த மக்கள்…!

ஓடிசா மாநிலத்தில் தேன் கடல் மாவட்டம் சந்திரசேகர்பூர். இப்பகுதியில் குடியிருப்பவர், நாக பேடி மாஜி.   இவரது மனைவி சஞ்சலா. இவர்கள் இருவருக்கும் கல்யானமாகி 25 வருடத்திற்கு‌ மேலாகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.   அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் சஞ்சலா வேறொரு ஆணுடன் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளார்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த நாக பேடி அடிக்கடி அவரிடம் இது பற்றி கேட்டு தகராறு செய்துள்ளார். மனைவி மீது சந்தேகம் அதிகரிக்கவே அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.   அப்போது ஆத்திரத்தில்  மரம் வெட்டும் கத்தியை எடுத்து மனைவியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் வெட்டிய தலையை இரவில் வீட்டிலேயே வைத்திருந்து, மறுநாள் காலையில் அந்த தலையை எடுத்துக்கொண்டு, 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்தே சென்று சரணடைந்துள்ளார்.

இதற்கிடையில் மனைவியின் தலையுடன் அவர் சாலையில் நடந்து சென்றதை பார்த்த பலரும் பயந்து ஓடி உள்ளனர். மேலும் பொது மக்கள் சாலையில் தலையுடன் நடந்து செல்லும் அவரை வேடிக்கை பார்த்துள்ளனர். சிலர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்க முயற்சித்துள்ளனர். இந்நிலையில் அவராகவே போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்துள்ளார்.

Baskar

Next Post

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான அனைத்துக் கட்சி கூட்டத்தில்-தமிழக எம்பிக்கள் பங்கேற்பு...!

Sun Jul 17 , 2022
புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. கூட்டத் தொடரை சுமுகமான முறையில் நடத்துவது பற்றி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி. […]

You May Like