பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிஸ் ரஞ்சன். இவருக்கும் இவரது மாமியார் பூஜாவுக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடிவெடுத்து, ஊரை விட்டு வெளியேறி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பிறகு கிரேட்ரா நொய்டாவுக்கு சென்று அங்குள்ள செட்டாகமாவில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பூஜாவை கொடூரமாக கொலை செய்த ஆசிஸ், அவரது உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர், காவல் நிலையத்தில் தகவல் சொன்னதும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இருந்த, பூஜாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணையில் ஆசிஸ் தலைமறைவாகியுள்ளதால், அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். எதற்காக மாமியார் பூஜாவை கொலை செய்தார் என்ற அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது . வீட்டின் உரிமையாளரிடம் செய்த விசாரணையில் ஆசிஸ்க்கு புதிய வேலை கிடைத்திருப்பதாக பூஜா தன்னிடம் கூறிக் கொண்டிருந்தார் என்றும், இதனால் பத்தாம் தேதி வீட்டை காலி செய்ய போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் இந்த கொலை நடந்துள்ளது. ஏன் கொலை செய்தார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.