தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் அல்லாமல் தன்னுடைய திறமையை மட்டுமே வைத்துக் கொண்டு முதலில் சின்னத்திரையில் கால் பதித்து கலக்கி, தற்சமயம் வெள்ளித்திரை வரையில் பல சாதனைகளை புரிந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவருடைய நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. ஆனாலும் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதனை தொடர்ந்து, அவருடைய நடிப்பில் அயலாம் என்ற திரைப்படம் தயாராகி திரைக்கு வர காத்திருக்கிறது.
தற்சமயம் சிவகார்த்திகேயனின் கன்னத்தில் முத்தமிடும் ஒரு நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் வைரலாக பரவியதால் யார் அந்த சிறுமி என்ற விவரம் அறிவதற்கு ரசிகர்கள் தவறாக காத்திருந்தனர். தற்போது அந்த புகைப்படத்தின் விவரம் தெரிந்திருக்கிறது அதாவது அவர் வேறு யாரும் அல்ல, தற்போது மக்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற அயலி திரைப்படத்தின் கதாநாயகி அபி நட்சத்திரா தான் அந்த கதாநாயகி என்பது தெரியவந்துள்ளது.