fbpx

போலி பாஸ்போர்ட் வழக்கில் தப்பி சென்ற வங்கதேச இளைஞர்…..! செங்கல்பட்டு அருகே கைது….!

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் சமீபத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர் அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் வழங்கியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, அவருடைய பாஸ்போர்ட்டை வாங்கி ஆய்வு ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதை உடனடியாக பறிமுதல் செய்த காவல்துறையினர், போலி பாஸ்போர்ட் வைத்திருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த பிலால் உசேன் (32) என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது, பின்பு அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். அதற்கு முன்னர் நோய் தொற்று பரிசோதனை செய்வதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் தான் அந்த இளைஞர் காவல் துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழங்கிய புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதல் கட்டமாக தலைமறைவான பிலால் உசேனை பிடிப்பதற்கு தனி படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி முடிக்கி விடப்பட்டது. இத்தகையநிலையில், செங்கல்பட்டில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Next Post

30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த சென்னை ஆயுதப்படை காவலர்….! நண்பருடன் அதிரடி கைது…..!

Wed May 17 , 2023
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா சட்டவிரோதமாக பணம் நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் குருவியாக செயல்பட்டு வந்ததார். இத்தகைய நிலையில், அழகுராஜா சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்தார். அதன் பிறகு மண்ணடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் 2 நாட்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது மன்றோ சிலை அருகே காவல்துறையினரின் சீருடை நின்றிருந்த 2 பேர் தங்களை […]

You May Like