தற்போதைய இளம் தலைமுறையினர் காதலை ஒரு கமிட்மெண்டாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் காதல் என்பது கமிட்மெண்ட் கிடையாது.அது ஒரு பொறுப்பு என்பதை உணர்ந்து இளம் தலைமுறை செயல் பட்டால் காதலில் வெற்றி அடைவது நிச்சயம்.
அதே நேரம் ஒருவர் நம்மை காதலிக்கவில்லை என்று தெரிந்தால் அவரிடமிருந்து விலகிச் செல்வது தான் உண்மையான காதலுக்கு அழகு.மாறாக நீ என்னை காதலிக்கவில்லை என்றால் யாரையும் காதலிக்க கூடாது என்று அவரை கொலை செய்வது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவது தன்னுடைய காதலை தானே கொச்சைப்படுத்தும் செயலாகும்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜன் குண்டே பகுதிக்கு அருகில் இருக்கின்ற பிரசிடென்சி பல்கலைக்கழக கல்லூரியில் லயாஸ்மிதா (19) என்ற மாணவி முதலாம் ஆண்டு பி டெக் படித்து வந்தார். பவன் கல்யாண் என்ற நபர் அதே பகுதியில் உள்ள வேறு கல்லூரியில் படித்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் லயாஸ்மிதாவும், பவன் கல்யாணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு நடுவே இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.இதனையடுத்து லயாஸ்மிதா பவன் கல்யாணிடம் பேசுவதை நிறுத்தி விட்டதால் அதன் பிறகு வேறு ஒரு நபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அந்த நபரை காதலித்து வந்தார்.
இது தொடர்பாக அறிந்து கொண்ட பவன் கல்யாண் தன்னுடைய காதலியிடம் தன்னை மீண்டும் காதலிக்குமாறு பலமுறை தெரிவித்திருக்கிறார் .ஆனால் அதற்கு லயாஸ்மிதா எனக்கு உன்னை பிடிக்கவில்லை, என்னை தொந்தரவு செய்யாதே என்று தெரிவித்து விட்டார்.
இதனால் ஆத்திரம் கொண்ட பவன் கல்யாண் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் லயாஸ்மிதாவின் கல்லூரிக்கு போயிருக்கிறார். அப்போது அவரிடம் 10 நிமிடம் பேச வேண்டும் என்று தெரிவித்து அவரை பவன் கல்யாண் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது மறுபடியும் தன்னை காதலிக்குமாறு பவன் கல்யாண் அவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த லயாஸ்மிதாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த லயாஸ்மிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பவன் கல்யாண் அதே கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்போது பவன் கல்யாணரிடம் நடத்திய விசாரணையில், அவர் சில தகவலை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். அதாவது, நாங்கள் இருவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்தோம்.
ஆனால் சமீபத்தில் லயாஸ்மிதா வேறொரு நபரை காதலிக்க ஆரம்பித்தார்.நான் பலமுறை அவரிடம் என்று கூறினார் இதனால் கோவமடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன் என்று கூறியுள்ளார்.
இறுதியாக அவரிடம் நான் பேச சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.இதனால் ஆத்திரத்தில் நான் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன். நானும் லயாஸ்மிதாவின் பெயரை என்னுடைய மார்பில் பச்சை குத்தினேன்.
பச்சை குத்திய அதே இடத்திலேயே கத்தியால் என்னை நானே கூட்டிக் கொண்டேன் என்று பவன் கல்யாண் வாக்குமூலம் வழங்கினார்.