மனிதனுக்கு பிரச்சனைகள் வருவதும் மன அழுத்தம் வருவதும் சகஜமான விஷயம்தான் ஆனால் அதற்காக ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமும் ஆகாது, அது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகவும் ஆகாது.பிரச்சனை என்று வந்து விட்டால் அதனை சந்திக்க பயப்பட்டு தான் பலர் தற்கொலை முடிவை மேற்கொள்கிறார்கள்.
அந்த பிரச்சனையை நேருக்கு நேர் சந்தித்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது அவ்வளவு சாதாரணமல்ல என நினைத்து விடுகிறார்கள். அதன் காரணமாக தான் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அந்த வகையில், சென்னை சேலையூர் அடுத்துள்ள சந்தோஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவருடைய மகள் ஜெயந்தி மகன் நவீன் ஜெயந்தி சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நவீன் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். ஜெயந்திக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய நிச்சியிக்கப்பட்டிருந்ததால் அவருடைய பெற்றோர் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்குவதற்காக சென்ற 15ம் தேதி சென்று விட்டனர், நவீன் கல்லூரிக்கு சென்று விட்டார். அப்போது ஜெயந்தி வீட்டில் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
கல்லூரிக்கு சென்ற நவீன் இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டிற்கு வெளியே கேட் மூடப்பட்டிருந்தது இதனால் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தன்னுடைய சகோதரி ஜெயந்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இருந்ததை கண்டு அதிர்ச்சிகுள்ளான நவீன் கதறி அழுதுள்ளார். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜெயந்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் சைதாப்பேட்டையில் இருக்கின்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் இடம் வாங்குவதற்காக வங்கியின் மூலமாக 31 லட்சம் ரூபாய் லோன் வாங்கி அதனை கட்டி வந்தது தெரியவந்தது.
எதிர்வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடன் அதிகமாக இருந்ததால் மன அழுத்தத்தில் அவர் இருந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தங்களுடைய விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.