பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக காதல் ஜோடியாக மாறியவர்களில் ஒருவர் தான் அமீர் மற்றும் பாவணி. இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது நாங்கள் காதலிக்கவில்லை என்று தெரிவித்தனர். ஆனாலும் பின்னாளில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பிபி ஜோடிகளில் பங்கேற்ற போது தான் காதலிக்கிறோம் என்று உறுதியாக கூறினார்கள்.
இருவரும் ஒன்றாக வெளிநாடு செல்வது, போட்டோ ஷூட் நடத்துவது என்று பிசியாக இருந்து வருகின்றனர். தற்சமயம் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அதாவது அவர் ஒரு புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இந்த திரைப்படத்தின் பூஜையும் போடப்பட்டுள்ளது பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.