fbpx

எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் கோவையில் பரபரப்பு…..! காவல் துறையினர் விசாரணை…..!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான காலியிடம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் சிறிய அறை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். இதனை கவனித்த பொதுமக்கள், உடனடியாக காட்டூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், எறிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதோடு, சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் துறை குழுவினர் ஆய்வு நடத்தினர். அதோடு அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்த பெண யார்? எதற்காக அவர் இந்த பகுதிக்கு வந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

பிளஸ் 2 தேர்வில் தோல்வியால் காதலன் தற்கொலை..!! விரக்தியில் காதலியான பிளஸ் 1 மாணவியும் தற்கொலை..!!

Tue May 9 , 2023
பிளஸ்-2 தேர்வில் காதலன் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த விரக்தியில் பிளஸ்-1 மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லி. இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகள் நந்தினி (வயது 16). இவர், பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் […]

You May Like