இப்போதெல்லாம் பண மோசடிகளில் ஈடுபடுபவர்கள் வீட்டிற்கு வந்து எனக்கு பணம் தாருங்கள் நான் அதை இரட்டிப்பாக்கி காட்டுகிறேன் என்று சொல்லி பணத்தை திருடுவதில்லை. மாறாக நேரடியாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் கை வைக்கிறார்கள்.
அதாவது பொதுமக்கள் தேவையற்ற இடங்களில் வழங்கும் அவர்களுடைய கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நேரடியாக அவர்களுடைய கைபேசி எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பி அதன் மூலமாக நவீன முறையில் கொள்ளையடிக்க தொடங்கி விட்டார்கள்.
அந்த வகையில், வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்பது குறித்து விழுப்புர மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் விழுப்புரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இணையதள குற்றப்பிரிவு காவல்துறையினர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. நாள்தோறும் சைபர் கிரைம் குற்றவாளிகளால் பொதுமக்கள் தங்களுடைய பணத்தை இழந்து வருகிறார்கள். தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று இதில் நிறைய பேர் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எத்தனை முறை இது தொடர்பான விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தினாலும் கூட இப்படியான குற்றங்களை செய்யும் குற்றவாளிகள் பொதுமக்களை மிகவும் சுலபமாக ஏமாற்றி, அவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்து ,கஷ்டப்பட்டு சேமித்து வைத்த ஒட்டுமொத்த பணத்தையும் மிகவும் சுலபமாக திருடிச் சென்று விடுகிறார்கள். 1930 என்ற ஹெல்ப்லைன் என்னில் அழைத்து உடனடியாக இது தொடர்பான புகாரை வழங்கினால் பொதுமக்கள் இழந்த தங்களுடைய பணத்தை மீட்டுக் கொள்ளலாம் என்ற விவரம் பலருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது.
ஆனால் இப்படி பணத்தை பறி கொடுத்தவர்கள் பணம் பறிபோய் விட்டது என்று தெரிந்த உடன் உடனடியாக புகார் வழங்கினால் மட்டுமே சுலபமாக அந்த பணத்தை மீட்க முடியும். ஆனால் தாமதமாக புகார் வழங்கினால் அவர்களுடைய பணத்தை மீட்பது மிக மிகக் கடினம் என்று சொல்லப்படுகிறது. அறிமுகமே இல்லாத யாராவது ஒருவர் கைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக மத்தியஅரசின் ,cybersafe.gov.in என்ற வலைதளத்தில் இதுவரையில் பதிவான குற்றவாளிகளின் கைபேசி எண், வங்கி கணக்கு எண், யுபிஐ முகவரி உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது.
தங்களை தொடர்பு கொண்டு பேசியவரின் கைபேசி எண், வங்கி கணக்கு எண், யுபிஐ முகவரி உள்ளிட்டவற்றைhttp://cybersafe.gov.in என்ற வலைதளத்தில் ஒருமுறை சோதித்து பார்க்கலாம். குற்றங்கள் தொடர்பாக புகார் வழங்க சப் இன்ஸ்பெக்டர் 94 982 02106 மற்றும் என்ற https://www.cybercrime.gov.in/இணையதளம் மூலமாக தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.