தமிழ் சினிமாவில் அழகிய தீயே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர் இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத் திரைப்படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார். ஆனால் திருமணம் நடைபெற்ற பின்னர் இவர் நடிப்பிற்கு சற்று ஓய்வு கொடுத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர் தற்போது மறுபடியும் திரைத்துறை பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி உள்ளார். இத்தகைய நிலையில், அவர் சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது சினிமாவுக்கு நான் மீண்டும் திரும்பி இருப்பது சிறப்பாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். அதேபோல ரசிகர்கள் இடையே எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்துள்ளார். அதைவிட நான் பல்வேறு கதைகளை கேட்டு சில கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார் தற்சமயம் சினிமா துறையின் பல மாற்றங்கள் உண்டாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படபிடிப்பு தளத்தில் பல பெண்கள் இருந்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது அதோடு கதாநாயகிகளுக்கு மட்டும் கேரவன் கொடுக்காமல் எல்லோருக்கும் கேரளம் கொடுத்திருக்கிறார்கள் தற்போது செல்ஃபி தொந்தரவு அதிகமாக இருக்கிறது உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போது செல்பி எடுப்பதற்காக வருகிறார்கள்.
ஒருவர் மரணம் அடைந்த நிலையில் அவரை காண்பதற்காக சென்றிருந்தோம். அங்கு கூட செல்பி எடுப்பதற்கு வற்புறுத்துகிறார்கள். ஒருவரின் மனநிலையை புரிந்து கொண்டு ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
.