சிவகங்கை அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி விமான நிலைய தேர்தல் பயணம் செய்த போது உடன் பயணித்த சக பயணி ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக அவதூறாக பேசி முகநூலில் நேரலை செய்தார் என்று கூறப்படுகிறது.
இதனைக் கண்ட எதிர்க்கட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை பறித்து கொண்டு சட்டையைப்பிடித்து இழுத்து வந்தார் ராஜேஸ்வரனை அங்கிருந்து அதிமுகவை சேர்ந்த சிலர் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய சிங்கம்புணரியைச் சார்ந்த ராஜேஸ்வரனை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அதன் பிறகு புகார் எதுவும் வராததால் அவரை விடுவித்தார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் நேற்று இரவு திருப்பரங்குன்றம் சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து காவல் உதவி ஆணையர் சசிகுமாரிடம் புகார் வழங்கியிருந்தார்.
அதேபோல ராஜேஸ்வரனும் முகநூலில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக பேசியபோது அவருடைய நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி, செல்போனை பறித்தாகவும் எடப்பாடி பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் அவருடைய உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒரு தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்து புகார் வழங்கியிருந்தார்.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவருடைய நேர்முக உதவியாளர் கிருஷ்ணன், சட்டசபை உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்க பதிவு செய்திருக்கிறார்கள் அதிமுகவின் தரப்பில் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராஜேஸ்வரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.