சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகையின்போது தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்ட வந்தது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2500 ரூபாய் பணம், அதோடு பொங்கல் வைக்க தேவைப்படும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டனர்.
ஆனால் இவை அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரையில் வழங்கப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்ற முறை பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட ரொக்க பணம் ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக அரசின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள்.இந்த நிலையில் தான் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக சென்ற வாரம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் 1000 ரூபாய் பணமும், 1 கிலோ பச்சரிசியும், சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் மூலமாக தமிழகத்தில் இருக்கின்ற 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் விதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகங்களில் வசிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும் இந்த அறிவிப்பில் கரும்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. விவசாயிகள் தங்களுடைய கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து விநியோகம் செய்யப்பட உள்ள இந்த பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து கடலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தைச் சார்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
அந்த விவசாயி தொடர்ந்துள்ள மனுவில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக தமிழக அரசு நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யலாம் என்ற நம்பிக்கையில் கரும்பை பயிரிட்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக, கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட இயலாத நிலை காணப்படுவதாக கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என்று கடந்த 24 ஆம் தேதி அரசுக்கு மனு வழங்கியதாகவும், அதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் எனவும் இந்த மனதில் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.