fbpx

தமிழகத்தை சுற்றி சுற்றி அடிக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கொடுத்த புது அலார்ட்!

பருவ மழை காலம் ஓய்ந்தாலும் இந்த மழை ஓய்ந்தபாடில்லை, சமீபத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் கரையை கடந்திருந்தாலும் இந்த மழைக்கு மட்டும் தமிழகத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வதற்கு இன்னமும் மனம் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.வங்கக்கடல், அரபிக்கடல் என்று மாறி, மாறி காற்றழுத்த தாழ்வு பகுதிகள் ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் இன்னமும் பரவலாக மழை பெய்த வண்ணம் தான் இருக்கின்றன.

அந்த வகையில் இன்றும், நாளையும், தமிழ்நாடு ,புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

அதேபோல வரும் 21ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், தமிழகம் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் விதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.

வரும் 22 ஆம் தேதி தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

வரும் 23ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல ராமநாதபுரம், தஞ்சை புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸில் இருந்து 30 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்று அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளிலும், அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம்.

அதேபோல நாளையும், நாளை மறுநாளும் குமரி கடல் பகுதி தமிழக கடலோர பகுதி மன்னார் வளைகுடா, இலங்கை கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசலாம் என்று கூறப்படுகிறது.

வரும் 22ஆம் தேதி குமரிக்கடல் பகுதி, தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணித்து 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Next Post

’வழக்கு எல்லாம் எனக்கு துணி கடையில் கட்டைப்பை வாங்கி வருவது போல’..!! காவல்துறையை வம்பிழுத்த டிடிஎஃப்..!!

Mon Dec 19 , 2022
‘வழக்கு எல்லாம் எனக்கு துணி கடைக்கு சென்று கட்டைப்பை வாங்கி வருவது போல’ என்றும் காவல்துறை பொய்யான காரணங்களை கூறி இளைஞர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதாகவும் யூடிபர் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் செந்தில் செல்வம்என்ற இயக்குநரின் அலுவலக திறப்புக்காக சிறப்பு விருந்தினராக யூடிபர் டிடிஎஃப் வருகை தந்தார். அவரைக்கான பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை […]
’வழக்கு எல்லாம் எனக்கு துணி கடையில் கட்டைப்பை வாங்கி வருவது போல’..!! காவல்துறையை வம்பிழுத்த டிடிஎஃப்..!!

You May Like