மும்பையை போன்று தற்போது தமிழகத்திலும் விபச்சாரத்தை சட்டரீதியான தொழிலாக கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா? என்று சில வருடங்களுக்கு முன்னர் ஆய்வு செய்ய தொடங்கினார்கள். பின்பு அது கைவிடப்பட்டது.
ஆனால் தற்சமயம் சென்னையில் சட்டவிரோதமாக விபச்சார தொழிலை நடத்தி வரும் ஒரு கும்பல் சட்ட விரோதமாக நடக்கும் தொழில் என்று கூட பாராமல் விளம்பரப் பலகை வைத்து அந்த தொழிலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையை அடுத்துள்ள கிண்டியில் தனியார் விடுதி ஒன்றில் வெளியே விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த எலக்ட்ரிகல் பேனரில் எடுத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான பெண்களை 1000 ரூபாய்க்கு என்று திரையில் ஒளிபரப்பப்பட்டிருந்தது.
இதனை அந்த தெரு வழியாக சென்ற ஒரு நபர் தன்னுடைய கைபேசியின் மூலமாக வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த தனியார் விடுதிக்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த விளம்பர பலகையில் உணவு வகைகள் மட்டுமே விளம்பரம் செய்யப்படும் எனவும், இந்த சர்ச்சுக்குரிய விளம்பரம் எவ்வாறு வெளியானது என்பது தொடர்பாக தெரியவில்லை எனவும் அந்த தனியார் விடுதி நிர்வாகம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த விடுதியில் ஏற்கனவே பாலியல் தொழில் நடந்திருக்கிறதா? அல்லது விடுதி நிர்வாகத்தின் மீது இருக்கும் தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக, யாராவது இதனை செய்து இருக்கிறார்களா? என்று காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கு நடுவே சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை சம்பந்தப்பட்ட விடுதி ஊழியர்கள் அகற்றினர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆன்லைன், டேட்டிங் ஆப், whatsapp குழுக்கள் மூலமாக பாலியல் தொழிலை சிலர் ரகசியமாக நடத்தி வருகிறார்கள். இப்படி ஆன்லைன் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் கூட்ட நெரிசல் இல்லாத பகுதிகளில் தனி வீடுகளை வாடகைக்கு எடுத்தோ அல்லது தங்கும் விடுதிகளை ஒரு நாள் வாடகைக்கு எடுத்தோ இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதிலும் குறிப்பாக இணையதள செயலிகள் மூலமாக அறைகளை பதிவு செய்து சந்தேகம் வராதபடி இந்த தொழில் நடைபெறுகிறது. அவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் குழுவில் அவர்கள் எதிர்பார்க்கும் குறியீட்டை அனுப்பினால் பெண்களின் புகைப்படங்கள், எடுத்துக் எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கான பணம், வர வேண்டிய இடத்திற்கான விவரம் உள்ளிட்டவை அனுப்பப்படுகிறது. இந்த தொழிலுக்காக வெளிமாநில பெண்கள், தமிழ் பெண்கள், மாடல் அழகிகள் என்று பலர் ஈடுபடுத்தப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது.