fbpx

பழிக்குப் பழி மகன்கள் கண் முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட தந்தை……! சென்னையில் பயங்கர சம்பவம்……!

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடியான சீனா என்கின்ற சீனிவாசன்( 42) இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி அடிதடி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது குறிப்பாக தென் சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த நாகூர் மீரான் என்பவரை இவர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்ற அவர் சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரவுடி சீனிவாசன் தன்னுடைய இரண்டு மகன்கள் உடன் அதே பகுதியில் 11 வது தெருவில் நடைபெற்ற தன்னுடைய மைத்துனர் மாரிமுத்துவின் 16 வது நாள் காரிய நிகழ்வில் பங்கேற்று கொள்வதற்காக சென்றார். அதன் பிறகு வீட்டு வாசலில் தன்னுடைய மகன்களுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஸ்ரீனிவாசன். அப்போது முகக்கவசம் அணிந்து கொண்டு பட்டாகத்தியுடன் இருசக்கர வாகனத்திலும் ஆட்டோவிலும் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சீனிவாசனை சரமாரியாக வெட்டியது இதை தடுக்க முயற்சி செய்த அவருடைய மகன்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இதில் ரத்த காலத்தில் சரி இந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே இவர் இருந்தார். இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு படுகாயம் அடைந்த அவருடைய 2 மகன்களுக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்ட விசாரணையில், நாகூர் மீரானின் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக சீனிவாசனின் கொலை நடைபெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. மகன்கள் கண்முன்னே தந்தை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

11,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் வோடபோன் நிறுவனம்..!! அதிர்ச்சியில் ஊழியர்கள்..!!

Thu May 18 , 2023
அடுத்து வரும் 3 ஆண்டுகளில் சுமார் 11,000 ஊழியர்களை உலக அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் சிஇஓ மார்கெரிட்டா டெல்லா வால்லே தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் வகையில் இதைச் செய்ய வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்குறைப்பு குறித்து வோடபோன் நிறுவனம் முதல் முறையாக அறிவித்தது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் புதிய சிஇஓ இந்த […]

You May Like