சென்னை ஏழுக்குணறு போர்ச்சுகீசியர் தெருவை சேர்ந்த அருண்குமார் இவருடைய மனைவி சாந்தி. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள் இதில் மூத்த மகள் மகாலட்சுமி (19) தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் படித்து வந்தார். இளைய மகள் சற்றே மனநலம் குன்றியவர். இந்த தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இத்தகைய நிலையில், தான் குடும்பத்தில் இருந்த வறுமையின் காரணமாக, இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி இணையதளம் மூலமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார் மகாலட்சுமி. இதில் அவர் சுமார் 30,000 ரூபாய் வரையில் பணத்தை கட்டி ஏமாந்து போனார். இதனை அறிந்த தாய் குடும்பம் இருக்கும் நிலையில் இப்படி பணத்தை இழந்து விட்டாயே என்று திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, மன வேதனையில் இருந்த மகாலட்சுமி, சென்ற மாதம் 2ம் தேதி வீட்டில் கூட்டிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து கல்கத்தாவை சேர்ந்த அமானுல்லா கான் (20),முகமது பாசில்( 21), முகமது ஆசிப் இக்பால் (22) உள்ளிட்ட 3️ பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.