சென்ற ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் அலுவலகத்தில் இருந்த கட்சி குறித்த அசல் பத்திரங்கள், ஆவணங்கள், ரசீதுகள் கட்சியின் பெயரில் இருக்கின்ற சொத்து ஆவணங்கள் போன்ற பொருட்களை பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டனர் என்று புகார் எழுந்தது.
இது குறித்து கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி சி.வி. சண்முகம், சென்னை, ராயப்பேட்டை காவல் துறையில் புகார் வழங்கினார் அந்த புகாரின் அடிப்படையில், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கின்றன. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இத்தகைய நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வாழ்க்கை விசாரித்த நீதிமன்றம் அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் அமைப்பு செயலாளர் சிவி சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.