fbpx

யூடியூபை பார்த்து கள்ள நோட்டை அச்சடித்த நபர் ஆந்திராவில் கைது…..!

சுலபமான வழிமுறைகளின் மூலமாக கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 8,200 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் youtube மூலமாக கள்ள நோட்டு அச்சிடுவதை பார்த்து அதேபோல செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக கலர் பிரிண்டர், ஸ்கேனர் உள்ளிட்டவற்றை பெங்களூருவில் இருந்து அவர் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒரிஜினல் நோட்டுகளை ஸ்கேன் செய்து அதன் மூலமாக கள்ள நோட்டுகளை தயார் செய்து இருக்கிறார் கோபால்.

அதன் பிறகு அவற்றை 15 நாட்களாக மதன பள்ளியில் உள்ள சந்தைக்கு எடுத்துச் சென்று காய்கறி வாங்குவதைப் போல நடித்து மாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கள்ள நோட்டை மாட்ட முயன்ற கோபாலை வியாபாரிகள் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

கோபாலை கைது செய்த காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவர் வைத்திருந்த கைப்பையை பரிசோதனை செய்தது அப்போது அவரிடம் 500, 200, 100, உள்ளிட்ட மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருந்தது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, கோபாலை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யூடியூபை பார்த்து கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கூறியுள்ளார்.

கோபாலிடமிருந்து 12000 ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 5️, நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கின்றனர் உள்ளிட்டவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.

Next Post

எப்போதும் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா..? அப்படினா நீங்களே இதை வீட்டில் ரெடி பண்ணலாம்..!!

Mon May 22 , 2023
ஆண், பெண் என இருவருக்கும் சருமத்தின் மீது அதிக அக்கறை இருக்கும். அனைவரும் தங்களின் சருமம், இளமையாகவும் மென்மையாகவும் வைத்திருக்க சந்தைகளில் விற்கும் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், நமக்கு எந்த விதமான பயனும் அதனால் கிடைக்காது. அந்தவகையில், இரசாயன சோப்பு மற்றும் கிரீம்களை பதிலாக தேங்காய் பால், தேன் உள்ளிட்ட பொருட்களை வைத்து வீட்டிலேயே எப்படி பாடி வாஷ் செய்யலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தேவையான […]

You May Like