நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி செய்வது உள்ளிட்டவை நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் வைத்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
பொதுவாக அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள், அதிலும் காவல்துறை, மாவட்ட ஆட்சியர், அமைச்சர் என்று முக்கிய பொறுப்பில் இருக்கும் பலர் காலை எழுந்தவுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதேபோல காவல்துறையில் இருப்பவர்கள் நிச்சயமாக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
ஆனால் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் ஒரு சில செயலே நம்முடைய உயிருக்கு ஆபத்தாக மாறினால்?
சென்னை திருவல்லிக்கேணி வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (22) இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார் ஜூடோ வீரரான லோகேஷ் நாள்தோறும் பயிற்சிக்காக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு செல்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல கடந்த 24ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஜுடோ பயிற்சிக்காக கடற்கரைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி கொள்ளான அவருடைய தந்தையை செந்தில்குமார் இது தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். காவல்துறையினர் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், நேற்றைய தினமும், இரவு 7:45 மணி அளவில் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் லோகேஷ் சடலம் கரை ஒதுங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர். பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து, லோகேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் லோகேஷ் கடலில் குளிக்கும்போது அலையின் சீற்றத்தால் கடலுக்கு இழுத்துச் சென்று மரணம் அடைந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையெனில் அவர் கொலை செய்யப்பட்டு கடலில் தூக்கி வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.