fbpx

நீங்கள் செலுத்தி கொண்ட தடுப்பூசி கோவேக்சினா இல்லை கோவிஷீல்டா.. இந்த தகவல் தெரியுமா..!

கொரோனா வைரஸ் மற்றும் கொரோனா உருமாற்றம் பெற்ற வைரஸ்களுக்கு எதிராக எதிராக கோவேக்சின் தடுப்பூசியைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசிதான் அதிவேகமாக நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது என்று ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் இந்தியன் வைரலாஜி நிறுவனம் சேர்ந்து உள்நாட்டில் தயாரித்த தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசி பழைய முறையான வைரஸை உயிரிழக்ச செய்து அதிலிருக்கும் ஸ்பைக் புரோட்டீன்களை வைத்து தயாரிக்கப்படும் மருந்தாகும். இந்த தடுப்பூசியானது, கடந்த காலங்களில் பலத்தடுப்பூசிகளின் ஃபார்முலாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி என்பது அஸ்ட்ராஜென்கா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சேர்ந்து உருவாக்கியது. இதனை அடினோ வைரஸ் எனப்படும் சிம்பன்சி குரங்குகளிடம் காணப்படும் சளி வைரஸிலிருந்து கோவிஷீல்டானது தயாரிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் மெட்ரிவ் எனும் நிறுவனமானது கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் இடையே மனிதர்கள் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தி அளவுகள் பற்றி ஆய்வு ஒன்றை நடத்தி வந்தது. ஆய்வின்படி 2021,ஜூன்  முதல் 2022, ஜனவரி வரை 18 – 45 வயது வரையிலான 691 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் 6 முறை ஆன்ட்டிபாடி பரிசோதனை மற்றும் 4 முறை செல்லுலார் பரிசோதனையும் நிகழ்த்தப்பட்டது. 

இதில் கோவேக்சின் தடுப்பூசியானது தனிநபர்களிடம் வெளிப்படுத்திய நோய் எதிர்ப்புச்சக்தி அளவைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசியில் மூலம் கிடைக்கப்பெற்ற நோய் எதிர்ப்புச்சக்தி அளவு அதிகமாக இருந்தது.

ஐஐஎஸ்இஆர் நிறுவனத்தின் நோய்தடுப்பு சிறப்பு வல்லுநரான வினிதா பால் இதனை பற்றி கூறுகையில் “ இளம் தலைமுறையினர் செலுத்திக்கொண்ட கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளிலிருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி அளவானது மாறுபடுகிறது. 

கோவிஷீல்ட் தடுப்பூசியை உடலில் செலுத்திக்கொண்டர்களுக்கு ரத்தத்தில் உருவாகும் நோய் எதிர்ப்புச்சக்தி நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளார். ஆய்வுகளின் முடிவுகள் படி பார்த்தால், கோவிஷீல்ட் தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்திஅளவு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது. 

இதனை தொடர்ந்து மேலும் ஒமைக்ரான், கொரோனா டெல்டா வேரியன்ட், ஒமைக்ரான் உருமாற்ற வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் சிறப்பாக செயல்படுகிறது என்று உறுதியாக தெரிவிக்க முடியாது. ஆனாலும் கோவேக்சின் தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, கோவிஷீல்ட் சிறப்பாகச் செயல்படுகிறது என்று பால் தெரிவித்தார்.

Baskar

Next Post

#கள்ளக்குறிச்சி: மது போதைக்காக கணவர் செய்த செயல்.. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!

Sun Jan 8 , 2023
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏமாப்பேரை என்ற பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் என்பவர். இவர் தனது தாய் மற்றும் மனைவி நளினியுடன் வசித்து வருகிறார்.  இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையான வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் பாலகிருஷ்ணன். அத்துடன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு செய்துள்ளார்.  சம்பவம் நடைபெற்ற அன்று பணம் கேட்டு இருவரும் குடுக்காததால் மது குடிப்பதற்கு பணம் இல்லாத […]

You May Like