திருப்பூரில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற பொது மக்களை மிரட்டி அடித்தா மாணவர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில், குமார் நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கும், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும். சென்ற ஒரு வாரமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று இரண்டு பள்ளி மாணவர்களும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மாறி மாறி இரு பள்ளி மாணவர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால், அங்கிருந்து சிலர் இந்த தாக்குதல் தடுக்க சென்றனர். இதை தொடர்ந்து மாணவர்கள் தாக்குதலை தடுக்க சென்றவர்களையும் கற்களை வீசி விரட்டியெடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு சென்று மோதல் ஈடுபட்ட இரண்டு பள்ளிகளை சேர்ந்த, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.