fbpx

தமிழக ஆளுநரை நோஸ்கட் செய்த திமுக கூட்டணி கட்சிகள்….!

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களுக்கும் அந்த மாநில அரசுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது இதற்கு பிள்ளையார் சுழிப்போட்டவர் புதுவையின் முன்னாள் ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி.அவரிடமிருந்து தொடங்கப்பட்ட இந்த மோதல் மெல்ல, மெல்ல இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பரவத் தொடங்கியது.

இந்த நிலை தற்சமயம் தமிழகத்திலும் தலை தூக்கி இருக்கிறது கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் அறிக்கையில் சில வார்த்தைகளை சேர்த்தும், சில வார்த்தைகளை தவிர்த்தும் அதனை வாசித்தார். இதற்கு எதிராக உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதனால் பாதியிலேயே சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறினார் தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்ஸிட்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆளுநரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு நடுவில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்து விட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளுநரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் காட்சியைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்து இருக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கவில்லை புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஆளுநர் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில், அவர் வழங்கும் தேநீர் விருந்து பங்கேற்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஆகவே இதனை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அந்த கட்சியின் தமிழக சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்திருக்கிறார். அதோடு மதிமுகவும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.

Next Post

UPI 123PAY : சாதாரண கீபேட் போன் வைத்திருப்பவர்களும் UPI முறையில் பணம் அனுப்பலாம்... எப்படி தெரியுமா..?

Wed Jan 25 , 2023
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே, போன் பே ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. எனினும் ஸ்மார்ட்போர் பயனர்கள் மட்டுமே யுபிஐ முறையில் பணம் அனுப்ப முடியுமா என்றால், […]

You May Like