fbpx

ஊழலில் திளைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியால் கர்நாடக மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது…..! பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு…..!

கர்நாடக மாநிலத்தில் எதிர்வரும் 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நாளை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது இத்தகைய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து 26 கிலோ மீட்டருக்கு வாகன பேரணியை மேற்கொண்டார்.

சாலை மூலமாக பேரணி மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடிக்கு வழியெங்கும் பாஜகவினர் மலர்களை தூவி உற்சாகமான வரவேற்பை வழங்கினர்.இந்த பேரணி நடைபெற்ற போது சுமார் 8 லட்சம் பேர் பிரதமரை வரவேற்றதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து பாதாமி தொகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 300 ரூபாய்க்கு கிடைத்த ஒரு ஜிபி மொபைல் டேட்டா பாஜக ஆட்சியின் 10 ரூபாய்க்கு கிடைத்திருக்கிறது என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியால் ஜனநாயக மாண்பை சீர்குலைக்க மட்டும்தான் முடியும் எனவும், 85%அளவுக்கு கமிஷன் பெற்று சாதனை படைத்தது காங்கிரஸ் என சாடியுள்ளார். மேலும் ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் கட்சியால் கர்நாடக மக்களுக்கு சேவை செய்ய இயலாது என தெரிவித்துள்ளார்.

இதற்கு நடுவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் லிங்காயத் மற்றும் பட்டியலின் இட ஒதுக்கீடு குறைந்துவிடும் என்ற உள்துறை அமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார் ஆட்சியை தக்க வைக்க முன்னணி பாஜக தலைவர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்று பலரும் கர்நாடகாவில் நேற்றைய தினம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நேற்றைப்போலவே இன்றும் நரேந்திர மோடி பிரமாண்டமான சாலை பேரணி மேற்கொள்ள இருக்கிறார்.

Next Post

நாளை வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்…..! அறிவிப்பை வெளியிட்டது அரசு தேர்வுகள் துறை….!

Sun May 7 , 2023
சென்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமான 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் மாதம் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை 4,33000 மாணவிகளும் 4,16000 மாணவர்களும் 23,747 தனித் தேர்வர்களும் எழுதினர். ஒட்டுமொத்தமாக 8.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை […]

You May Like