ஒருவர் மீது நாம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். என்றால் அந்த நம்பிக்கைக்கு அவர் தகுதியானவரா? என்பதை நிச்சயமாக பரிசோதித்து பார்க்க வேண்டியது அவசியம்.
அப்படி நாம் பரிசோதித்துப் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக அந்த நபர் நம்மை மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு நடைபெற்றுள்ளது.
சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்தவர் டெய்சி(42) அதே பகுதியில் இருக்கின்ற ஒரு ஹோட்டலில் பணிபுரிந்த நபரின் மூலமாக மதுராந்தகத்தை சேர்ந்த சுரேஷ்(51) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் டெய்சி அவருக்கு மகளிர் குழு மூலமாக கடன் பெற்று கொடுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், டெய்சி கடந்த 5ம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்த புகார் மனுவில், சுரேஷ் என்பவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பணமும் கேட்டு மிரட்டி இருக்கிறார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் அந்த வீடியோவை என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு அனுப்பி வைத்தார். ஆகவே சுரேஷ்குமார் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அவர் வாங்கிய கடனை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மொத்த தவணையையும் செலுத்தி விடுவதாகவும், நேரில் வந்து வாங்கிக் கொள்ளுமாறும் தெரிவித்தார். என்று அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதன் காரணமாக அவர் தங்கியிருந்த அறைக்கு நான் சென்றேன். அப்போது சுரேஷ்குமார் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த புகார் மனுவில், அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல்துறையினர், ஒரு மாத காலமாக தலைமுறைவாக இருந்த சுரேஷ்குமாரை நேற்று காலை கைது செய்தனர். அவரிடம் இருந்த கைபேசியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.