fbpx

காரில் சாய்ந்தது குத்தமா.? சிறுவனை எட்டி உதைத்த கொடூரன்.! வீடீயோ வைரல்.!

கேரள மாநிலத்தில் உள்ள தலைச்சேரி பகுதியில் இஷாத் என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தில் குடும்பத்துடன் கடைவீதிக்கு சென்றபோது ஓரமாக தன்னுடைய காரை நிறுத்தியுள்ளார். கடைக்கு சென்று அவர் திரும்பி வந்தபோது அவரது காரில் ஒரு சிறுவன் சாய்ந்து கொண்டு நின்று இருந்தான்.

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர் மோசமான செயலில் இறங்கியுள்ளார். அதாவது, இஷாத் அந்த சிறுவனின் இடுப்பு மீது எட்டி காலால் உதைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் எதுவும் தெரியாமல் நின்று கொண்டிருந்த அந்த அப்பாவி குழந்தை அங்கிருந்து சென்று விட்டது.

இந்த மனிதாபிமானம் இல்லா நிகழ்ச்சியை பார்த்த பொதுமக்கள் காரின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

கார் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த குழந்தையை எட்டி உதைத்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இஷாத் என்பவரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

"ஒரு பொண்ணு இப்டி இருக்க கூடாது." பெண் பத்திரிக்கையாளரை அவமதித்த சமூக ஆர்வலர்.!

Sat Nov 5 , 2022
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சமூக ஆர்வலர் சம்பாதி பிடே என்பவர் முதல்வர் ஏக் நாத் சிண்டேவை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு பெண் பத்திரிக்கையாளர் அவரிடம் கேள்வி எழுப்ப, “பெண் என்பவள் பாரதமாதாவுக்கு ஈடானவள். அவள் பொட்டு வைக்காமல் விதவை போல இருக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு பேட்டி அளிக்க அவர் மறுத்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து […]

You May Like