புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கக்கூடிய மலைக்குடிபட்டியைச் சேர்ந்த வேலு என்பவருடைய மனைவி பழனியம்மாள் (75) இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். மகன் சுப்பிரமணியனின் மனைவி கனகு(42) இந்த நிலையில், பழனியம்மாள் தன்னுடைய கணவர் வேலு உயிரிழந்து விட்டதால் தன்னுடைய மகனின் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் தலைவலியின் காரணமாக, அவதிப்பட்டு வந்த மூதாட்டி பழனியம்மாள் தன்னுடைய மருமகளான கனகுவிடம் சூடாக ஒரு டீ போட்டு கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். அதன் பெயரில் மருமகள் கனகவும் டீ போட்டுக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அதனை வாங்கிக் கொண்ட மாமியார் பழனியம்மாள் டீ ஏன் சூடாக இல்லை? என்று மருமகளிடம் சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது .இதன் காரணமாக, மாமியார் மருமகளுக்கு இடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது.
இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட மருமகள் கனகு அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மூதாட்டி என்று கூட பார்க்காமல் தலை போன்ற பல்வேறு இடங்களில் சரமாரியாக அவர் மீது தாக்குதல் நடத்திருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மூதாட்டி சத்தம்போட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அதோடு, காயமடைந்த பழனியம்மாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன் பெயரின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டி பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் மருமகள் கனகுவை கைது செய்து இருக்கிறார்கள்