விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்தார். இனிவரும் காலங்களில் இவர்தான் இந்த தொடரின் கதாநாயகனாக இருப்பார் எனவும், கோபி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இனி இந்த தொடரில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காது எனவும் அவரே தெரிவித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் இனி பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காதா? இனி வரும் காலங்களில் அவர் சீரியலில் இருப்பாரா? இருக்க மாட்டாரா? என்பது தொடர்பாக அந்த தொடரில் கோபியின் தந்தையாக நடிக்கும் நடிகர் ரோசரி விளக்கம் அளித்திருக்கிறார்.
அவர் தெரிவித்ததாவது, நிச்சயம் இந்த தொடரில் கோவைக்கான காட்சிகள் வந்து கொண்டே தான் இருக்கும்.அவர் ஒரு சிறந்த நடிகர் ரஞ்சித்தின் காட்சிகள் ஒரு புறம் என்றால் மறுபுறம் கோபியின் காட்சிகளும் கண்டிப்பாக வரும் என்று கூறியிருக்கிறார்.
அதோடு ,பாக்கியலட்சுமி தொடரில் எல்லோருக்கும் சமமான காட்சிகள் இருக்கும் அதே போல கோபிக்கும் கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.