தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக திரைத்துறையில் ஒரு தனி முத்திரை பதித்தவர்.இவருக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி, ரசிகர்களிடையே வரவேற்பு குறைந்ததே கிடையாது. எத்தனை நடிகர், நடிகைகள் திரைத்துறைக்கு வந்து போனாலும் இவருக்கு மட்டும் எப்போதுமே மவுசு குறைந்தது இல்லை. ஒரு காலத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கிய ரஜினிகாந்தை பல தயாரிப்பாளர்கள் அவமானப்படுத்தவும் செய்தனர்.
ஆனால் பிற்காலத்தில் அவரை அவமானப்படுத்திய தயாரிப்பாளர்களே இவருடைய படத்தை தயாரிப்பதற்கு வரிசையில் நின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றளவும் தற்போதைய இளம் இயக்குனர்கள் இவரை வைத்து ஒரு படமாவது நாம் இயக்கி விட மாட்டோமா? என்ற ஆவலில் காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயார் செய்து வருகிறது. இந்த படத்தில் பிலிம்ஸ் வீடியோ நேற்று வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 2 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அந்த இரு திரைப்படங்களில் ஒன்றுதான் லால்சலாம் இந்த திரைப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கின்றார். இதனை தவிர்த்து ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமும் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்குகிறார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. டான் திரைப்படத்தின் வெற்றியையடுத்து ரஜினியை வைத்து சிபிச்சக்கரவர்த்தி இயக்குகிறார் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில் தான் ரஜினிகாந்துக்கு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்த கதை திருப்திகரமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே இந்த திரைப்படத்தின் இயக்குனர் மாற்றப்பட வாய்ப்புகள் இருக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சியை வழங்கி உள்ளது.