தமிழ் புத்தாண்டான நேற்றைய தினம் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். அவர் சொன்னதை போலவே ஊழல் பட்டியலையும் வெளியிட்டார் அதேபோல அவர் அணிந்திருக்கும் ரபேல் வாட்ச் பில்லையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பில்லில் ஜிஎஸ்டி வரியோடு சேர்ந்து 3,46,530 என்று பதிவாகி உள்ளது. ஆனால் அண்ணாமலை என்னுடைய வாட்சின் உண்மையான ஓனர் கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் தான். அவரை எனக்கு சற்றேற குறைய இரண்டு ஆண்டுகளாக தெரியும் இந்த வாட்ச்சை அவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் என்னுடைய வீட்டு வாடகை, ஊழியர்களின் சம்பளம், காருக்கு பெட்ரோல் என அனைத்தையும் என்னுடைய நண்பர்கள் தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று கூறி இருந்தார். இதற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. கேள்விகளும் எழும்பி இருக்கின்றன. இதனை தொடர்ந்து திமுகவின் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஆதாரமற்றது என்றும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே அதையும் சமாளிக்க தயார் என்று தெரிவித்துள்ளார். பாஜகவின் சட்டசபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் ஊழல் பட்டியலுடன் ரஃபேல் வாட்ச் பில்லையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையில், பில்லை தானே கேட்டீர்கள்? சீரியல் நம்பரையா கேட்டீர்கள்? எனக் கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தை முன் வைத்துள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.