ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பது என்பது வேறு, மூடநம்பிக்கை இருப்பது என்பது வேறு இவை இரண்டையும் சரியாகப் பிரித்து யாரும் பார்ப்பதில்லை. அதன் காரணமாகத்தான் கடவுள் நம்பிக்கைகளை கூட மூடநம்பிக்கை என்று ஒரு சாரார் தெரிவித்து வருகிறார்கள்.
கடவுளை வணங்குவது, சில சம்பிரதாயங்களை செய்வது என்பது அவரவர் மன நிம்மதிக்காக செய்வதுதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அப்படி அவர்கள் செய்யும் சடங்குகளால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்பட போவதில்லை. மாறாக அவர்களுடைய மனதிற்கு அமைதியான சூழ்நிலை ஏற்படும்.
ஆனால் இங்கே ஒரு மூடநம்பிக்கை நடைபெற்றுள்ளது. அதாவது ஒடிசாவில் பந்த்சாஹி என்ற பழங்குடி கிராமம் ஒன்று இருக்கிறது. அந்த கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், இந்த பகுதியில் சிறுவர்களுக்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
இப்படி சிறுவனுக்கும் பெண் நாய்க்கும், சிறுமிக்கும், ஆண் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தால் அவர்களுக்கு இருக்கும் தீய சக்திகள் விலகி நாய்க்கு சென்று விடும் என்ற நம்பிக்கை இந்த பகுதி மக்களிடையே இருக்கிறது.
இது போன்ற மூடநம்பிக்கையான செயல்களை இன்னும் ஒரு சிலர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் இத்தகைய நிலையில், இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் பரவி வந்ததால் அதனை கவனித்த நெட்டிசன்கள் இப்படியெல்லாமா திருமணம் செய்வார்கள்? என்று தங்களுடைய ஆதங்கத்தை கருத்தாக தெரிவித்து வருகிறார்கள்