காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் கால் திருவிழா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவருடைய மகன் தமிழ் தமிழ்வாணன் (24)பட்டதாரியான இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் குணா. இவர்கள் இருவரும் மது போதையில் உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் குணாவின் தந்தை ரகு அந்த வழியாக வருகை தந்தார். அப்போது மகனிடம் தகராறு ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இதனை தொடர்ந்து, தமிழ்வாணனை அவர் கண்டித்து இருக்கிறார். ஆகவே இருவருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு தந்தையும் மகனுமாக சேர்ந்து தமிழ்வாணனை தாக்கியதாக கூறப்படுகிறது.
எத்தகைய சூழ்நிலையில், ஆத்திரம் கொண்ட தந்தையும், மகனும் அரிவாளால் தமிழ்வாளனை தலையில் கழுத்து போன்ற பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். தமிழ்வாணனின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள்.
. இதனை பார்த்த தந்தையும், மகனும் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஆகவே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ்வாணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பொதுமக்கள் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த அவர், பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றன.