fbpx

காரைக்காலில் காலரா நோய் பரவல் அதிகரித்துள்ளதால், கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அளித்த மாவட்ட ஆட்சியர்..!

காரைக்கால் மாவட்டத்தில் காலராவால் இரண்டு பேர் உயிரிழந்த எடுத்து காலரா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அதிக அளவில் பரவி வருகிறது. அரசு பொது மருத்துவமனையில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள், அதிக அளவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர் மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர், இணை நேய்களால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் காலரா நோய் கட்டுப்படுத்த காரைக்காலில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் திருமண மண்டபங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கும் விடுதிகள் போன்றவற்றில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் காரைக்காலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.

Baskar

Next Post

சமூக ஊடகங்களை கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும், உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு..!

Mon Jul 4 , 2022
சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா கூறினார். நபிகள் நாயகம் பற்றிய கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பாரதிய ஜனதா கட்சி முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்து, அவர் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இடம் பெற்றிருந்தவர் நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா ஆவார். இவர், டெல்லியில் […]

You May Like