கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் சேர்ந்த பிபின் பிரியன் (29) கார் ஓட்டுநரான இவர், பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவரது உறவுக்கார பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவிக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே பிபின் பிரியனை அண்ணனாகவே அழைத்து பழகி வந்தார். என்றும் கூறப்படுகிறது. வெளியே எங்கு சென்றாலும் ப்ரியனை அவர் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இத்தகைய நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் தன்னுடைய நண்பரின் காரில் அந்த மாணவியை காரில் ஏற்றி கல்லூரியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அப்போது செல்லும் வழியில் திருநயினார் குறிச்சியில் வந்து கொண்டிருந்த போது தன்னுடைய நண்பரை பார்க்க வேண்டும் என்று தெரிவித்து நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் பிரியன்.
அப்போது அந்த மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து இருக்கிறார். பிரியன் அவனை குறித்து சற்று நேரத்தில் அந்த மாணவி மயக்கம் ஆனார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பிரியன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்து வைத்திருக்கிறார். சற்று நேரம் கழித்து மயக்கம் தெளிந்த மாணவியை மறுபடியும் காரில் ஏற்றி வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டார் மயக்கத்தில் இருந்ததால் இங்கே என்ன நடந்தது? என்பது அந்த மாணவிக்கு தெரியவில்லை.
மறுநாள் அந்த மாணவியின் தொலைபேசிக்கு அழைத்த ரீஎன் உன்னை பலாத்க்காரம் செய்த ஆபாச வீடியோ என்னிடம் இருக்கிறது. ஆகவே நான் அழைக்கும் போதெல்லாம் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இல்லை என்றால் சமூக வலைதளங்களில் அதனை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு ப்ரியன் மீது காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கின்ற அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.