fbpx

கான்வென்ட் விடுதிக்குள் நுழைந்து.. சிறுமிகளுக்கு மது கொடுத்து.. பாலியல் பலாத்காரம்; நீண்ட நாளாக நடக்கும் கொடூரம்..!

கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருக்கும் கான்வென்ட் ஹாஸ்டலுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து அங்குள்ள சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே கடினம்குளத்தில் இருக்கும் கான்வென்ட் ஒன்றில், கடந்த புதன்கிழமை இரவு கான்வென்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாஸ்திரி மடத்திற்கு அருகிலுள்ள பகுதியில் காவல் துறையின் இரவு நேர ரோந்து பணியின் போது, சிலர் கான்வென்ட்டுக்குள் அத்துமீறி நுழைவதை கவனித்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்தனர். மேலும் அவர்களை விச்ரித்ததில், அவர்கள் விடுதிக்குள் சென்று அங்குள்ள சில சிறுமிகளுக்கு மது குடிக்க கொடுத்து, அதன்பின் அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து ஒரு பெண் காவல் அதிகாரி அந்த நிறுவனத்திற்குச் சென்று மைனர் சிறுமிகளிடம் வாக்குமூலம் பெற்றார்.

இந்நிலையில் அந்த சிறுமிகள் நீண்ட காலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது காவல்துறையினரின் காவலில் இருக்கும் குற்றவாளிகள், சிறுமிகளை பலாத்காரம் செய்ய வேறு சிலரிடமிருந்தும் ஆதரவு பெற்றுள்ளதாக, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் பலர் இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

’2026இல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும்’..! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Fri Aug 26 , 2022
அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, எடப்பாடியாரின் கீழ் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை மாநகராட்சியில் மேயராக உள்ள […]
’2026இல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும்’..! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

You May Like