fbpx

11 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் தலைமை ஆசிரியர்…..! அதிரடி தீர்ப்பு வழங்கிய போக்சோ சிறப்பு நீதிமன்றம்…..!

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த அரசு தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு போக்சோ நீதிமன்றம் 10 வருட காலம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சென்ற 2015 ஆம் வருடம் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை ஆசிரியர் மாணவிகளை ஆடைகளை களையச் சொல்லி வற்புறுத்தி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மாணவிகளை அவர் மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தான் அவரால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தன்னுடைய தாயிடம் இது தொடர்பாக தெரிவித்ததையடுத்து தலைமை ஆசிரியர் மீதான பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்தனர். ஆகவே கடந்த 2015 ஆம் வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கம் பதிவின் அடிப்படையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளியில் படித்த 11 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது தெரியவந்தது.

மேலும் இந்த வழக்கில் கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் இருந்து 43 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அவர்களுடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தேபாஷிஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மீது போக்சோ சட்டம், 2012 இந்திய தண்டனைச் சட்டம், மேலும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989 உள்ளிட்டவற்றின் 12 பிரிவுகளின் கீழ் முன்னாள் தலைமை ஆசிரியர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. ஆகவே கடந்த புதன்கிழமையன்று இந்த வழக்கில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில் நீதிபதி தெரிவித்திருப்பதாவது, குற்றவாளிக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனையின் அதோடு 47,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட மாணவிகளில் 2 பேருக்கு தலை 5 லட்சம் ரூபாயும் மற்ற ஒன்பது மாணவிகளுக்கு பல இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட சேவை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Post

நற்செய்தி.. ஒரே நாளில் ரூ.320 குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பெண்கள்..

Thu Apr 6 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]

You May Like