சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை, சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் ரவுடி சுரேஷ் கருக்கா(45). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன. மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையிலும் இருக்கிறது. ரவுடியான சுரேஷின் மனைவி விமலா தூய்மை பணியாளராக இருந்து வருகிறார்.
தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக கணவர் சுரேஷ் சென்றுள்ளார். விமலா தூய்மை பணியை செய்து கொண்டிருந்தபோது 2 சக்கர வாகனத்தில் சிலர் அச்சுறுத்தும் வகையில் அங்கே வந்துள்ளனர். இதைக்கண்ட கருக்காசுரேஷ் தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்பொழுதும் விடாமல் அந்த கும்பல் சுரேஷை துரத்தியுள்ளது.
நடுரோட்டில் சுரேஷை ஓட, ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர். சுரேஷை வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தங்களுடைய இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் சென்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,கருக்கா சுரேஷின் உடலை கைப்பற்றி,
உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த கொலை காரணமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அந்த விசாரணையின் அடிப்படையில் சுரேஷுக்கு, அந்த கும்பலுக்குமிடையே கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்