சற்றேற குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பாக புதுவையில் கொலை, கொள்ளை, ரவுடிசம் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தனர். அப்போதும் ஆட்சியில் இருந்தது ரங்கசாமி தலைமையிலான அரசு தான். இப்போதும் புதுவையில் ஆட்சியில் இருப்பது ரங்கசாமி தலைமையிலான ஆட்சி தான்.
தமிழகத்திலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை என்பதே உண்மை.
புதுச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பம் ஆர்கே நகர் பகுதியைச் சார்ந்தவர் சதாசிவம், இவருடைய மகன் பிரவீன் (19) இவர் மீது கொலை கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் காவல்துறையில் நிலுவையில் இருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடம் அரியாங்குப்பம் சுப்பையா நகரில் ஜிம் பாண்டியன் என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த சிறுவனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரவீன் சிறுவன் என்பதால் அந்த கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே அந்த அந்த சிறுவன் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் பிரவீன் சென்று கொண்டிருந்த போது ஆர் கே நகரில் இருக்கின்ற பெரியார் சிலை அருகே கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அவரை வழிமறித்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன் வண்டியை அங்கேயே போட்டுவிட்டு உயிர் வைத்தல் தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியிக்கிறது. இதில் தலை போன்ற பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு பிரவீன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த கும்பல் சாவகாசமாக நடந்து சென்றது.
இந்த கொலை குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து இருந்த காவல்துறையினர் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரியாங்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜிம்பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பல்வேறு விதத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.