திருச்சி அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ்(31) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நாள்தோறும் கஞ்சா மற்றும் குடிபோறையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது, அண்மையில் ஒரு நாள் இரவு இவர் தன்னுடைய குழந்தையின் அருகில் படுத்திருக்கிறார். சற்று நேரம் போன பிறகு குழந்தை அழுதிருக்கிறது. மகளின் சத்தத்தை கேட்ட தாய் அருகில் வந்து பார்த்தபோது தன்னுடைய கணவர் குழந்தைக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதை தெரிந்து கொண்டார்.
உடனடியாக குழந்தையை அவரிடம் இருந்து மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அங்கே குழந்தைக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தகாயமுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அதன் பிறகு இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் துறையினர் குழந்தையின் தந்தை மற்றும் தாயிடம் விசாரணை நடத்தி, குழந்தையின் தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.