fbpx

பெரம்பலூர் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உட்பட 5️ பேர் அதிரடி கைது….!

நாட்டில் அவ்வப்போது மான், புலி, மயில் உள்ளிட்ட விலங்கு, பறவைகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் அவ்வப்போது ஈடுபட்டு பலரை கைது செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், பெரம்பலூர் பகுதியில் சில மாதங்களாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் வருவதையடுத்து பெரம்பலூர் நகர குற்றப்பிரிவு காவல் துறை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த விதத்தில் நேற்று அதிகாலை பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளலூர் கிராமப் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான விதத்தில் டாடா மேஜிக் பயணிகள் வேன் ஒன்று வருவதை கவனித்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாகனத்தில் வேட்டையாடப்பட்ட 3 மான்களின் சடலங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளாயினர். அதோடு அந்த வேனில் இருந்த 5 பேரையும் பிடித்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர்கள் திருச்சி மாவட்டம் எதுமலை வனப்பகுதியில் உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கியின் மூலமாக மான்களை வேட்டையாடி பெரம்பலூர் பகுதிக்கு எடுத்து வந்தது தெரிய வந்தது.

அத்துடன் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேட்டை மணி என்கின்ற மணிகண்டன்( 24) ராமச்சந்திரன் (30) வெள்ளலூர் கிராமத்தைச் சார்ந்த கோவிந்தன் (33) கார்த்திக் (19) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த காவல்துறையினர் பெரம்பலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் 5 பேரையும் ஒப்படைத்தனர்.

அதோடு, அவர்களிடமிருந்த 2 உரிமம் வாங்கப்படாத நாட்டு துப்பாக்கிகள் வேட்டையாடப்பட்ட 3 மான்களின் சடலம் அதற்கு அவர்கள் பயன்படுத்திய டாடா மேஜிக் வேன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையைச் சார்ந்தவர்கள் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.அரிய வகையிலான புள்ளி மான்கள் பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்ட வனப்பகுதிகளில் அதிகமாக வசித்து வருகின்றனர்.

இந்த மான்கள் கோடை காலங்களில் குடிநீருக்காகவும், இறை தேடியும், வனப்பகுதியை விட்டு வெளியே வரும்போது வேட்டையாடப்படுவதும் ,சாலையை கடந்து செல்லும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் கிணறுகளில் தவறி விழுவதும் வழக்கம் ஆகி வருகிறது.

அதோடு, மட்டுமல்லாமல் மின் வேலிகளில் சிக்கி மான்கள் உயிரிழப்பு என்று பல விதங்களில் அழிந்து வருகின்றனர் அந்த விதத்தில் 3️ மான்கள் வேட்டையாடப்பட்ட சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பேசுபொருளாக மாறிய ஆளுநர் மாளிகையின் குடியரசு தின விழா அழைப்பிதழ்….!

Mon Jan 23 , 2023
தலைநகர் சென்னையில் சென்ற 4ம் தேதி நடைபெற்ற விழா ஒன்று தமிழ்நாடு என்று தெரிவிப்பதை விட தமிழகம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் ரவி பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவிற்காக அனுப்பிய அழைப்பிதழ் மறுபடியும் சர்ச்சையாக வெடித்தது. ஆளுநர் மாளிகையின் அந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என எழுதுவதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர் […]

You May Like