fbpx

ஜி ஸ்கொயர் விவகாரம் திமுக எம்எல்ஏ வீட்டில் வருமானவரித்துறை திடீர் சோதனை…..! சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர்…..!

தமிழகத்திற்கு 10 வருடங்களுக்கு மேலாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலையில், அந்த நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தினார்.

ஆகவே இன்று காலை முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தகவல் வந்ததை தொடர்ந்து, இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

சென்னை சேத்துப்பட்டு உள்ள ஜி ஸ்கொயர் தலைமை அலுவலகத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வருகை புரிந்தனர். அலுவலகம் பூட்டப்பட்டு இருந்ததால் அலுவலகம் திறக்கும் வரை காத்திருந்து அதன் பிறகு சோதனையை ஆரம்பித்தனர். அதேபோல கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள்.

3 வாகனங்களில் வந்திருக்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத்திலும் 13 பகுதிகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையின் நடைபெறும் பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அதேபோன்று சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திமுகவின் சட்டசபை உறுப்பினர் மோகன் வீட்டிலும், அவருடைய மகன் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். அவர்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்தவர்கள் நீலாங்கரையில் இருக்கின்ற ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், திமுகவினர் தற்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

Next Post

ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதிக்குள் இதை செய்யுங்கள்…..! அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!

Mon Apr 24 , 2023
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பணியை முன்னேற்றம் அடைய வைக்கும் விதத்தில், ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து மாவட்ட வாரியாக சுழல் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் 2021 22 ஆம் கல்வி ஆண்டில் சுமார் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 3 சிறந்த அரசு பள்ளிகளை […]

You May Like