உத்திரபிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை உறுப்பினரான பிராம் தத் திவேதி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய நெருங்கிய நண்பரும் உதவியாளருமான சஞ்சீவ் ஜீவா என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இந்த நிலையில், லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சஞ்சீவ் ஜீவா மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றன. இதில் சஞ்சீவ் ஜீவா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அதோடு ஒரு குழந்தையும், காவல் அதிகாரியும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறார்கள்.
நீதிமன்ற வளாகத்திற்கு நடைபெற்ற இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்ற ஜமாஜ்வாதி கட்சி தலைவர் அகலேஷ் யாராவது இதுதான் ஜனநாயகமா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் அதோடு யார் கொலை செய்யப்பட்டார்கள் என்பது முக்கியமல்ல என்று தெரிவித்து இருக்கின்ற அவர், கொலை நடந்திருக்கிறது என்றால் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது குறித்த முதல் கட்ட விசாரணையில் வழக்கறிஞர் உடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த கொலையை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.